இராணுவ மருத்துவமனைகளில் செவிலியர் வேலை!

இராணுவ மருத்துவமனைகளில் நர்சிங் பணிக்கு வரும் 27 -ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இந்திய ராணுத்திற்கு சொந்தமான ஏராளமான மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் செவிலியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள ராணுவ மருத்துவமனைகளில், செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை SSC அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

தேர்வர்கள் exams.nta.ac.in என்ற இணையதளத்தில் வரும் 27 -ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜனவரி 14 -ம் தேதி தேர்வு நடைபெறும். ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி நர்சிங் அல்லது பிபி, பிஎஸ்சி நர்சிங் முடித்தவர்கள் மற்றும் மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி படைத்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author