மத்திய அரசுப் பணிகளுக்கான குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்குடன், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்களுக்கான ஊக்கத்தொகைத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
07.03.2023 அன்று தொடங்கப்பட்ட இத்திட்டம், தமிழ்நாட்டு இளைஞர்கள் தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகுவதற்குப் பல பயிற்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
2025-2026-க்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, முதன்மைத் தேர்வில் (Mains) வெற்றி பெற்று நேர்முகத் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு ₹50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இத்திட்டம் ₹10 கோடி நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்களுக்குத் தமிழக அரசின் ரூ.50,000 ஊக்கத்தொகை
