அமெரிக்காவின் தடை நடவடிக்கைகளுக்கான பல எதிர்ப்பு நடவடிக்கைகளைச் சீன வணிக அமைச்சகமும், சீன அரசவையின் சுங்க வரி விதி ஆணையமும் 4ஆம் நாள் அடுத்தடுத்து வெளியிட்டன. இதற்கு முன்பு, ஃபெண்டானில் என்ற சாக்குபோக்கில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து சீனப் பொருட்களின் மீது 10விழுக்காடு சுங்க வரியை கூடுதலாக வசூலிக்க அமெரிக்க அரசு அறிவித்தது.
உலக வர்த்தக அமைப்பின் சர்ச்சை தீர்வு அமைப்பிடம் அமெரிக்காவின் கூடுதல் சுங்க வரி வசூலிப்பு குறித்து சீனா வழக்கு தொடுத்துள்ளது.
மேலும், 15 அமெரிக்க நிறுவனங்களை ஏற்றுமதிக்கான தடை பட்டியலில் சீனா சேர்த்துள்ளது. டிகாம் உள்ளிட்ட 10 அமெரிக்க நிறுவனங்களை நம்பகமற்ற நிறுவனங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. மேலும், 2025ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் நாள் முதல் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பகுதியான இறக்குமதிப் பொருட்களின் மீது சுங்க வரி வசூலிப்பு அதிகரிக்கப்படும் என்று சீன அரசவையின் சுங்க வரி விதி ஆணையம் அறிவித்துள்ளது.