2024ஆம் ஆண்டு கிராமப்புறத்தில் நீர்வளம் மற்றும் நீர் மின்சாரம் பற்றிய பணித் திட்டங்களைச் சீன நீர்வள அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது.
கிராமப்புறத்தில் நீர் வினியோக அளவை உயர்த்தி, 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் கிராமப்புறத்தில் குழாய்த் தண்ணீர் வழங்கப்படும் விகிதம் 92 விழுக்காட்டை எட்ட வேண்டும் என்றும், குறிப்பிட்ட அளவிலான நீர் வினியோகச் சேவை வழங்கப்படும் கிராமவாசிகளின் விகிதம் 63 விழுக்காட்டை எட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறிய ரக நீர் வினியோகத் திட்டப்பணிகளின் கட்டுமானம் மற்றும் மேம்பாட்டை முன்னேற்றி, மாவட்ட நிலை நிர்வாகம் மற்றும் தொழில் முறையில் நிர்வாகம், பராமரிப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் இப்பணித் திட்டங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.