தனுஷ் அவருடைய 54வது படத்தை துவங்கிவிட்டார்.
‘குபேரா’ படத்தின் வெற்றியை கொண்டாடிவரும் நேரத்தில் அவருடைய இயக்கத்தில் வெளியீட்டிற்கு தயாராக உள்ள ‘இட்லி கடை’யின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் நிறைவு பெற்ற நிலையில் அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார் தனுஷ்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டெர்னஷனல் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்குகிறார்.
‘போர் தொழில்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த விக்னேஷ் ராஜா இயக்கும் இந்த படம், தனுஷின் திரைப்பயணத்தில் வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கும் என டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
கிரைம், திரில்லர் மற்றும் எமோஷன்கள் அடங்கிய ஒரு படமாக இருக்கும் எனவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
தனுஷின் ‘D54’ படப்பிடிப்பு துவங்கியது; யார் இயக்குனர்?
