குடியரசு தினம் 2026 : வாழ்த்து செய்திகள் மற்றும் வாட்ஸ்சப் ஸ்டேட்டஸ்..!

Estimated read time 0 min read

1. இந்தியாவின் 77வது குடியரசு தினமாகிய இன்றில் இருந்தாவது ஒற்றுமை ஓங்கட்டும், பிரிவினை ஒழியட்டும். இந்தியர்கள் அனைவர்க்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!

2. சாதி, மத, இன பேதமின்றி… மனதில் சாதிக்கும் எண்ணமும், மக்களிடையே அன்பும், இணக்கமும் அதிகரிக்கட்டும் இந்த குடியரசு தின நன்னாளில்!

3. வளரட்டும் இந்திய பாரத தேசத்தின் பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரமும், ஒழியட்டும் மக்கள் இடையேயான பிரிவினையும், ஒடுக்குமுறையும். இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!

4. மூவர்ணக்கொடியின் நிறங்களை பிரதிபலிக்கும் வகையில், காவியை குறிக்கும் வலிமை மற்றும் தைரியம் அனைவரிடமும் பெருகட்டும், குறிக்கும் வெள்ளை நிறமான அமைதி மத மற்றும் மாநில எல்லைகளை கடந்து மக்கள் மனம் முழுவதும் பரவட்டும், நிலத்தை குறிக்கும் பச்சை நிறமான விவாசாயமும், விவசாயியின் வாழ்கையும் செழிக்கட்டும். குடியரசு தின நல்வாழ்த்துகள்!

5. தவித்த வாய்க்கு தண்ணீர் அளிப்பது எவ்வளவு அவசியமோ, நம் தேசத்தின் குடிமக்களான அனைவருக்கும் சம உரிமையும், மரியாதையும் அளிப்பதும் அவ்வளவு அவசியம். சமத்துவம் காப்போம், சம உரிமை அளிப்போம், இனிய குடியரசு தின வாழ்த்துகள் !

6. குட்டிகளின் நிறங்கள் வெவ்வேறாயினும், தாய் பூனையின் அன்பும், ஊட்டும் தாய் பாலின் தரமும் வேறுபடுவதில்லை. அது போல, மொழி, மதம், மாநிலம் என வேறுபட்டிருந்தாலும், இந்தியர்கள் என்ற ஒற்றை பெயரின் கீழ் நாம் அனைவரும் இந்திய மாதாவிற்கு சமமே! இனிய குடியரசு தின வாழ்த்துகள்!

7. எப்படி அனைவருக்கும் பிடிக்கும்படியான ஒரு உணவை சமைக்க பிற மாநிலங்களில் இருந்து விளைவிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் தேவைப்படுகிறதோ, அப்படி தான் நம் தேசம் உலகம் விரும்பும்படியான இடமாக அமைய வேண்டும் என்றால் நாட்டில் இருக்கும் அனைத்து மக்களின் ஒற்றுமை தேவை. ஒற்றுமை போற்றும் நாளாக இந்த குடியரசு தினத்தை கொண்டாடுவோம்!

8. ஊரெங்கும் மகிழ்ச்சி பரவட்டும், நாடெங்கும் வளர்ச்சி பெருகட்டும், உலகெங்கும் நாட்டின் பெருமை ஒளிரட்டும்… இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!

9. போராடி பெற்ற சுதந்திரமும், குடி உரிமையும் எந்நாளும் குறையாமல்… பொன்னாக கருதி காப்போம்! அனைவர்க்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!

10. ஈன்றெடுத்த தாயின் பேரன்பை போல, பல கனவுகளை கண்முன் செயற்படுத்தி நாட்டின் தரத்தை உயர்த்துவோம்…இனிய குடியரசு தின வாழ்த்துகள்!

Please follow and like us:

You May Also Like

More From Author