இந்தியாவின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இன்று (ஜனவரி 26) சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதற்கான நமது கூட்டுத் தீர்மானத்தில், இந்தத் தருணம் புதிய ஆற்றலையும் உற்சாகத்தையும் ஊட்டட்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், “இந்தியாவின் கௌரவம், பெருமை மற்றும் புகழின் அடையாளமான இந்தத் தேசியத் திருவிழா, உங்கள் வாழ்வில் புதிய உத்வேகத்தை அளிக்கட்டும்.
வளர்ந்த இந்தியாவிற்கான உறுதிப்பாடு இன்னும் வலுப்பெற வேண்டும் என்பதே எனது இதயப்பூர்வமான விருப்பம்.” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
77 வது குடியரசு தினம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
