சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் ஜனவரி 19ம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2025ம் ஆண்டில் சீன குடிமக்களின் நபர்வாரி செலவழிப்பு வருமானம், 43 ஆயிரத்து 377 யுவானை எட்டி, முந்தைய ஆண்டில் இருந்ததை விட 5.0 விழுக்காடு அதிகரித்தது. வசித்த இடம் வாரியாக எடுத்துக்கொண்டால், நகரவாசிகளின் நபர்வாரி ஆண்டு வருமானம், 56 ஆயிரத்து 502 யுவானை எட்டி, முந்தைய ஆண்டில் இருந்ததை விட 4.3 விழுக்காடு அதிகரித்தது. கிராமவாசிகளின் நபர்வாரி ஆண்டு வருமானம், 24 ஆயிரத்து 456 யுவானை எட்டி, முந்தைய ஆண்டில் இருந்ததை விட 5.8 விழுக்காடு அதிகரித்தது. கிராமவாசிகளின் வருமானம், நகரவாசிகளின் வருமானத்தை விட வேகமாக அதிகரித்தது.
குடிமக்களின் நபர்வாரி நுகர்வு, ஆண்டு முழுவதும் 29 ஆயிரத்து 476 யுவானை எட்டி, முந்தைய ஆண்டில் இருந்ததை விட 4.4 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் தெரிய வந்தது.
படம்:VCG
