கூட்டுறவு சங்கத்தில் போலி நகைகள் அடமானம் வைத்து 18.67 லட்சம் ரூபாய் கடனாக பெற்றது அம்பலம்  

Estimated read time 0 min read

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள நாகமங்கலம் தொடக்க கூட்டுறவு கடன் சங்க லாக்கரில் நடைபெற்ற சோதனையில் 50 சவரன் நகைகள் போலியானவை என தெரியவந்துள்ளது.
இந்த நகைகள் 13 பாக்கெட்களில் அடமானம் வைக்கப்பட்டு, அதனடிப்படையில் 18.67 லட்சம் ரூபாய் வரை கடனாக பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனை கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் நடைபெற்றது.
போலி நகைகள் தொடர்பாக அவர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 126 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன.
இதில் பல சங்கங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே செயலர்கள் பணிபுரிந்து வருவது, முறைகேடுகளுக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

More From Author