சீனாவின் ஹைய்நான் தாராள வர்த்தக மண்டலம் முழுவதிலும் சுதந்திரமான சுங்க செயல்பாடுகள் 2025ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் நாள் முதல் அதிகாரப்பூர்வமாக இயங்கத் துவங்கும் என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத் துணை இயக்குநர் வாங் ச்சாங்லின் ஜூலை 23ஆம் நாள் தெரிவித்தார்.
காப்பு வரி விலக்க சலுகை என்பது இம்மண்டலத்தின் அமைப்பு முறையில் முக்கிய சிறப்புகளில் ஒன்று.
ஹாய்நான் தீவில் சுதந்திரமான சுங்க செயல்பாடுகள் இயங்கிய பிறகு, சுங்க வரியில்லாத உற்பத்திப் பொருட்களின் எண்ணிக்கை 6600ஆக அதிகரித்துள்ளன.
முன்பை விட, 53விழுக்காடு அதிகரித்து வெளிநாட்டுத் திறப்பு நிலையைக் குறிப்பிட்டளவில் உயர்த்தியுள்ளது என்று சீன நிதித் துறை அமைச்சகத்தின் துணை அமைச்சர் லியௌமின் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.