சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 19ஆம் நாள் பிற்பகல், துஷாபே நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் குழுவின் 25ஆவது கூட்டத்தில் கலந்துகொண்ட போது, பெலாரஸ் தலைமையமைச்சர் டோர்ஜினைச் சந்தித்துரையாடினார்.
அப்போது லீச்சியாங் கூறுகையில், சீனாவும் பெலாரஸும் ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கையை கொண்டு ஆதரவளிக்கும் உண்மையான நண்பர்களாகும். பெலாரஸுடனான பாரம்பரிய நட்புறவை சீனா தொடர்ந்து வளர்த்து, வர்த்தக முதலீடு, எண்ணியல் பொருளாதாரம், பண்பாட்டுப் பரிமாற்றம் உள்ளிட்டவற்றின் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, இரு நாட்டு மக்களுக்கு பயனளிக்க சீனா பாடுபட விரும்புகிறது. மேலும் இரு தரப்புக்கு பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றிய தொடர்புகளையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்தி, இரு நாடுகளின் கூட்டு நலன்களைப் பேணிக்காக்க வேண்டும் என்றார்.
