இஸ்ரோ- நாசாவின் கூட்டுத் தயாரிப்பில் ரூ.12,000 கொடியில் உருவாக்கப்பட்ட நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஜி.எஸ்.எல்.வி.எப்- 16 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது. இஸ்ரோ- நாசாவின் கூட்டுத் தயாரிப்பில் ரூ.12,000 கொடியில் உருவாக்கப்பட்ட நிசார் செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி.எப்- 16 ராக்கெட்டில் விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து GSLV-F16 ராக்கெட் மூலம் நிசார் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
புவியின் சுற்றுச்சூழல் அமைப்பு, பருவநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து தகவல் தரும் வகையில் நிசார் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.
புவியின் மேற்பரப்பு மாற்றங்களை நிசார் செயற்கைக்கோள் கண்காணிக்கும். நிலநடுக்கம், புயல், எரிமலை வெடிப்பு போன்ற பேரிடர்களை முன்கூட்டியே கணிக்க நிசார் செயற்கைக்கோள் உதவும்.