சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த 2025ஆம் ஆண்டு வசந்த விழா சிறப்பு நிகழ்ச்சி பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியானது, மகிழ்ச்சி மற்றும் மங்கலம் நிறைந்த சூழலில், உலகம் முழுவதுமுள்ள பார்வையாளர்களுடன் இணைந்து புத்தாண்டு சுவையைப் பகிர்ந்து கொண்டு, வசந்த விழாவை ஒன்றாகக் கொண்டாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இச்சிறப்பு நிகழ்ச்சியானது, ஜனவரி 28ஆம் நாளிரவு 8 மணிக்கு, சீன மத்திய தொலைக்காட்சி நிலையம், வானொலி மற்றும் புதிய ஊடகத் தளங்களில் ஒரே நேரத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.
மேலும் வரலாற்றிலேயே முதன்முறையாக இந்நிகழ்ச்சியானது தடையற்ற முறையில் ஒளிபரப்பப்படவுள்ளது. அதேபோன்று, பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் வசந்த விழா சிறப்பு நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை இணையவழி கேட்கலாம். செவித்திறன் குறைபாடுள்ள மக்களும் நிகழ்ச்சி ஒளிபரப்பைப் பார்த்து மகிழலாம்.