துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பன் உதயநிதி.பள்ளிப்படிப்பை முடித்த இன்பன் உதயநிதி, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கல்லூரியில் நிதி நிர்வாகம் தொடர்பான படிப்பை படித்து முடித்தார். அத்துடன் கால்பந்தாட்ட வீரராக சர்வதேச அளவிலான கால்பந்து போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி உள்ளார்.
இந்நிலையில் கல்லூரி படிப்பை கல்லூரி படிப்பை சில மாதங்களுக்கு முன்பு முடித்த இன்பநிதி க்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் இயங்கும் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக பிரிவில் பணியாற்றத் தொடங்கினார். ஜூன் 3ஆம் தேதி முதல் கலைஞர் தொலைக்காட்சியில் அவர் பணியாற்றிய வருவதாக கூறப்படுகிறது. தினமும் காலை 11 மணிக்கு அலுவலகம் சென்று மாலை 5 மணி வரை அங்கு இருந்து பணிகளை கவனிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. தாத்தா செல்லமான இன்பநிதி தற்போது திரைப்படத்தில் நடிக்க நடிப்பு பயிற்சி எடுத்து வருகிறார்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உதயநிதியின் மகன் இன்பன் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள ‘இட்லி கடை’ படத்தை வெளியிடுவதன் மூலம் விநியோகஸ்தராக அவர் களமிறங்கியுள்ளதை ரெட் ஜெயன்ட் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இதுதொடர்பான போஸ்டரில் இன்பன் உதயநிதியின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு முழுக்க ரெட் ஜெயிண்ட் மூவீஸ் சார்பில் ‘இட்லி கடை’ படத்தை – இட்லி கடை படத்தின் நடிகர், இயக்குநர் தனுஷ்” என்று பதிவிட்டுள்ளார்.
