மார்ச் 20ஆம் நாள் பிற்பகல் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மாஸ்கோவை சென்றடைந்து அந்நாட்டில் அரசுமுறைப் பயணத்தை தொடங்கினார்.
தொடர்ந்து அரசுத் தலைவராக பதவி ஏற்ற பின் அவர் வெளிநாட்டில் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும். புதிய யுகத்தில் சீனாவுக்கும் ரஷியாவுக்கும் பன்முக நெடுநோக்கு ஒருங்கிணைப்புக் கூட்டாளியுறவில் சீனா உயர்வாக கவனம் செலுத்துவதை இப்பயணம் வெளிகாட்டியுள்ளதாகவும், மேலும் முதிர்ச்சியாகவும் உறுதியாகவும் மாறி வரும் சீன-ரஷிய உறவு உலகின் பாதுகாப்பு மற்றும் நிதானத்தைப் பேணிக்காக்க உதவுவதாகவும் வெளியுலகம் கருதுகின்றது.
சீனா, ரஷியா ஆகிய இரண்டும் சுதந்திரத் தூதாண்மை கொள்கையைச் செயல்படுத்தி வருகின்றன. பெரிய நாடுகளுக்கிடையே சரியான அணுகுமுறையை இது காட்டுகின்றது. மாற்றம் மற்றும் குழப்பம் கலந்திருக்கும் தற்போதைய உலகில், இது உத்வேகம் தருவதாக உள்ளது.
உலகளாவிய கண்ணோட்டத்திலிருந்து, சீனாவும் ரஷியாவும் பல்வேறு துறைகளிலானா ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, உலகின் அமைதி மற்றும் நிதானத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. சமீப ஆண்டுகளில், ஐ.நா. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் நாடுகள் உள்ளிட்ட பலதரப்பு அமைப்புமுறைகளில் சீனாவும் ரஷியாவும் நெருக்கமான தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை நிலைநிறுத்தி, சில மேலை நாடுகளின் மேலாதிக்கச் செயல்களை உறுதியாக எதிர்த்து வருகின்றன. உலகில் கொந்தளிப்பு அதிகரித்து வந்தால், சீன மற்றும் ரஷிய உறவு நிலையாக முன்னேறி செல்ல வேண்டும் என்பதை உண்மை நிரூபித்துள்ளது.
நட்பு, ஒத்துழைப்பு மற்றும் அமைதி ரீதியான ஷிச்சின்பிங்கின் ரஷிய பயணம், அதிக சாதனைகளைப் பெற்று, உலக வளர்ச்சிக்கு மேலும் பெரிய பங்காற்றும் என்று நம்புகின்றோம்.