ஜெயிலர் 2 படத்தின் இறுதி வடிவம் எப்படி இருக்கும்? இயக்குனர் நெல்சன் அப்டேட்  

Estimated read time 0 min read

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்த நிலையில், அப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார், ஒரு நிகழ்ச்சியில் ஜெயிலர் 2 திரைப்படம் குறித்துப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
“கதையின்படி ஜெயிலர் 2 நன்றாக வந்துள்ளது. ஆனால், படத்தின் இறுதி வடிவம் எப்படி இருக்கும் என்பதைப் படப்பிடிப்பு முடியும் வரை என்னால் சொல்ல முடியாது.
இந்தப் படம் ரசிகர்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.” என்று அதில் நெல்சன் கூறியுள்ளார்.
வழக்கமான படங்களுக்கு இருக்கும் அளவுக்கு ஜெயிலர் படத்தின் முதல் பாகத்திற்கு எதிர்பார்ப்பு இல்லை. இருப்பினும், அந்தப் படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.

You May Also Like

More From Author