நோய்களை குணமாக்கும் பிரண்டை துவையல் எப்படி செய்யலாம் தெரியுமா ?

Estimated read time 0 min read

பொதுவாக நம் மூளை நரம்புகளை பலப்படுத்தி நம் ஞாபக சக்த்தியை அதிகரிக்க செய்யும் பிரண்டை பற்றியும் அதை துவையல் எப்படி செய்வது பற்றியும் கூறுகிறோம்

நாம் உணவில் சேர்க்கும் பிரண்டையில் உள்ள மருத்துவ நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

1.சில பெண்களுக்கு பீரியட்ஸ் பிரச்சினையிருக்கும் .அவர்கள் தினமும் காலையில் பிரண்டை சாற்றில் 6 தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் சீராகும்.

2.சிலருக்கு மூலமிருக்கும் .அவர்கள் தொடர்ந்து பிரண்டை சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் சரியாகும்.

3.சிலருக்கு எலும்பு வீக்காக இருக்கும் .அவர்கள் வாரத்திற்கு இரண்டு நாட்கள் பிரண்டை துவையல் சாப்பிட்டு வந்தால் உடல் எலும்புகள் வலிமைபெறும்.

4.சரி இப்போது ஆரோக்கியமான சுவையான பிரண்டை துவையல் செய்வது எப்படி என்று பார்ப்போம்

5.ஒரு பாத்திரத்தில் முதலில் நல்லெண்ணெய்யை ஊற்றி விடவும் .பின்னர் அதில் நறுக்கிய பிரண்டையை நன்றாக பச்சை வாசம் போகும்வரை வதக்கி விட வேண்டும்.

6.பின்னர், உளுத்தம்பருப்பு,பூண்டு ,தேங்காய் துண்டு , போட்டு பொன்னிறமாக வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

7.பிறகு, அந்த கலவையுடன் இஞ்சி மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்தெடுக்க வேண்டும்.

8.பிறகு வறுத்தெடுத்த அனைத்து பொருட்களையும் நன்றாக சூடு போக ஆற விட வேண்டும்.

9.அந்த கலவை ஆறிய பிறகு, ஒரு மிக்ஸியில் அனைத்து கலவையும் சேர்த்து அதனுடன் உப்பு, புளி, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக விழுதாக அரைத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

10.ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி விடவும் .பின்னர் அதில் கடுகு, சிறிதளவு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு மிக்ஸில் அரைத்த விழுதை சேர்த்தால் சுவையான ஆரோக்கியமான பிரண்டை துவையல் ரெடி.

Please follow and like us:

You May Also Like

More From Author