அமெரிக்கா மீது உலகின் கருத்து எதிர்மறைவாக மாறியுள்ளதோடு, சீனாவின் மீது நல்லெண்ண உணர்வு உயர்ந்தது என்று அமெரிக்காவின் அரசு சாரா ஆய்வு நிறுவனமான மோர்னிங் கன்சல்ட்(Morning Consult)அண்மையில் வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. இம்முடிவின்படி, மே திங்கள் இறுதி வரை, உலகளவில் அமெரிக்காவின் மீது நல்லெண்ண விகிதம் -1.5ஆகக் குறைந்தது மற்றும் சீனாவின் மீது இவ்விகிதம் 8.8ஆக உயர்ந்தது.
இவ்வாண்டில், அமெரிக்கா, சுங்க வரியைத் தாறுமாறாக விதித்த செயல், உலக பொருளாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தி, தன்னைத் தானே பாதித்துள்ளது. சுங்க வரி போரில் வெற்றியாளர் எவரும் இல்லை. அமெரிக்காவின் இச்செயல், மற்ற நாடுகளுக்கும் தனக்கும் தீங்கு விளைவித்துள்ளது.
அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்பது, பதற்றத்தை மட்டும் கொண்டு வந்துள்ளது. சுங்க வரி மேலாதிக்கத்துக்குத் தலைகுனிந்தால், மேலதிக அடக்குமுறையை எதிர்கொள்ளும். ஒற்றுமை, சுய வலிமை, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி ஆகியவை தான், சொந்த நலன்களைப் பேணிக்காத்து, கூட்டு வளர்ச்சியை நனவாக்கும் என்று மென்மேலும் அதிக நாடுகள் அறிந்து கொண்டுள்ளன.