ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டின் இடையே, பிரதமர் நரேந்திர மோடி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) முக்கிய தலைவரும், அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு மிகவும் நெருக்கமானவருமான சாய் கியை சந்தித்துப் பேசினார்.
இரு நாடுகளுக்கு இடையேயான அரசியல் ஈடுபாட்டை வலுப்படுத்துவது மற்றும் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராய்வது குறித்து இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயலகத்தின் செயலாளராகப் பதவி வகிக்கும் சாய் கியூ, சீனாவின் அரசியல் அமைப்பில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவர் ஆவார்.
இவர் அதிபர் ஜி ஜின்பிங்கின் நம்பிக்கைக்குரியவர் மற்றும் கட்சியின் அன்றாடச் செயல்பாடுகள், சித்தாந்தப் பணிகள் மற்றும் முக்கிய தேசியத் திட்டங்களை மேற்பார்வையிடுவதில் இவர் முக்கியப் பங்கு வகிக்கிறார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவரை சந்தித்த பிரதமர் மோடி
