கற்றல் விளைவுகளை மேம்படுத்தும் புதிய முயற்சியாக, தமிழக அரசு பள்ளிகளில் இந்த கல்வியாண்டு முதல் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதந்தோறும் மதிப்பீடுகள் (Monthly Assessments) நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, இந்த மாதாந்திர தேர்வுகள் மாணவர்களின் மனப்பாட திறனுக்கு பதிலாக கருத்தியல் புரிதலை வளர்க்கும் நோக்கில் நடைபெறுகின்றன.
மேலும், மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், உயர்நிலை சிந்தனை (Higher Order Thinking – HOT) கேள்விகள் இதில் இடம்பெற உள்ளன.
அரசுப்பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை இனி மாதாந்திர தேர்வுகள் நடத்தப்படும்
