சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 24ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மாநகரில், சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் தலைமையமைச்சர் லாரன்ஸ் வோங்கிற்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில்,
சீன-சிங்கபூர் ஒத்துழைப்பு, இரு நாடுகளின் நவீன கட்டுமானத்துக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. மேலும், இது பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்புக்கு முன்மாதிரியாக விளங்குகிறது. சீனாவின் வளர்ச்சியில் சிங்கபூர் மேலும் ஆழமாக ஒருங்கிணைந்து வருவதை சீனா வரவேற்கிறது என்றார்.
சீன-சிங்கப்பூர் நட்புறவு தலைமுறையாக வளர்ந்து வருகிறது. சிங்கப்பூரின் முன்னாள் தலைவர்கள் சீனா மீதான உறவில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். ஒரே சீனா எனும் கொள்கையில் சிங்கபூர் ஊன்றி நின்று, தைவான் பிரிவினைவாத சக்தியை எதிர்த்து வருவதாக லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.