சர்வதேச தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 30ஆம் நாள் நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், இவ்வாண்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75ஆம் ஆண்டு நிறைவாகவும், 14ஆவது ஐந்தாண்டுகாலத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஆண்டாகவும் இருக்கின்றது. தொழிலாளர்கள் கடினமாக உழைத்து, அறிவு மற்றும் வியர்வைக் கொண்டு கட்சி மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு ஆற்றி வருகின்றனர் என்று தெரிவித்தார்.மேலும், தரமான வளர்ச்சி மூலம் சீனப் பாணியுடைய நவீன மயமாக்கத்தின் கட்டுமானத்தை முன்னேற்றுவதில் தொழிலாளர் உற்சாகத்துடன் ஈடுபட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். அதே வேளையில், பல்வேறு மட்டங்களிலும் உள்ள கட்சி குழுக்களும் அரசுகளும் தொழிலாளர்கள் மீது அக்கறை செலுத்தி, பயனுள்ள முறையில் அவர்களின் சட்டப்பூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பேணிக்காத்து, கனவுகளை அடைய ஊக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.