திருவாரூர் : திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் இன்று (செப்டம்பர் 3) தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், நீலக்குடி நடைபெற உள்ள 10-வது பட்டமளிப்பு விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.
இந்த விழாவிற்காக திருவாரூர் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் நடைபெற்ற 9-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், மோசமான வானிலை காரணமாக அவரது வருகை ரத்து செய்யப்பட்டது.
இந்த ஆண்டு, அவர் மதியம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்து, பின்னர் பல்கலைக்கழக வளாகத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தர உள்ளார். மதியம் 1 மணிக்கு விருந்தினர் மாளிகையில் மதிய உணவு அருந்திய பின்னர், மாலை 3 மணிக்கு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.