அருணாச்சலப் பிரதேச தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், அருணாச்சலப் பிரதேச மாநில தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அந்த மாநில மக்களுக்கு வாழ்த்துகள். இந்தியாவின் வளர்ச்சிக்கு அருணாச்சலப் பிரதேச மக்கள் பெரும் பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
மாநிலத்தின் கலாச்சாரம், குறிப்பாக துடிப்பான பழங்குடி மரபுகள் மற்றும் வளமான பல்லுயிர் பெருக்கம் ஆகியவை பெரிதும் போற்றப்படுகின்றன. அருணாச்சலப் பிரதேசம் பல ஆண்டுகளாக செழிப்பாக இருக்கட்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
On Arunachal Pradesh Statehood Day, my best wishes to the people of the state. The people of Arunachal Pradesh are making rich contributions to India’s development. The culture of the state is also greatly admired, particularly the vibrant tribal traditions and the rich…
— Narendra Modi (@narendramodi) February 20, 2024