சீன ஊடகக் குழுமத்தின் 5ஆவது சீன மொழிக் காணொலி துவக்கம்

2025ஆம் ஆண்டு ஐ.நா.வின் சீன மொழி நாள் மற்றும் சீன ஊடகக் குழுமத்தின் 5ஆவது சீன மொழிக் காணொலி விழா ஏப்ரல் 10ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக துவங்கியது.

சீன ஊடகக் குழுமம், ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகம் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள பிற சர்வதேச அமைப்புகளுக்கான சீனப் பிரதிநிதிக் குழு, ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அலுவலகம் ஆகியவை இந்த நிகழ்வை கூட்டாக ஏற்பாடு செய்தன.

இந்த நிகழ்வு இப்போது முதல் மே 26ஆம் நாள் வரை சமர்ப்பிப்புகளை ஏற்றுக்கொள்ளும்.

“சீனாவில் சுற்றுப்பயணம்”என்ற கருப்பொருளுடன் தொடங்கியுள்ள இந்த நிகழ்வில் உலகளாவிய படைப்பாளிகள் சீனாவில் பயணம் மேற்கொண்டு பதிவு செய்து சீனாவை உலகிற்கு அறிமுகம் செய்யும் சன்னலாகத் திகழும் தங்களின் அனுபவக் காணொலிகளைச் சமர்ப்பிக்கலாம். விழாவின் நிறைவில் சேகரிக்கப்பட்ட காணொலிகளில் இருந்து பல விருதுகளுக்குரிய காணொலிகள் தேர்ந்தெடுக்கப்படும்.

 

 

You May Also Like

More From Author