அருணாச்சல பிரதேசத்தின் ரூ. 522 கோடி செலவியில் 5.2 மீட்டர் நிலம் கொண்ட ரோப்வே அமைக்கும் திட்டம் நாடைபெறுகிறது.
இந்த ரோப்வே திட்டமானது அருணாச்சல பிரதேசத்தில் உள்ள உலக புகழ் பெற்ற தவாங் மடாலயம் முதல் பெங்கா டெங் சோ ஏரி வரை மூன்று வருடங்களுக்குள் மேம்படுத்தப்படவுள்ளது.
இந்த புதிய ரோப்வே மூலம் தவாங் மடாலயத்திலிருந்து ஏரிக்குச் செல்ல ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஆகும். இதன் மூலம் போக்குவரத்து நெருசலையும் குறைக்கமுடியும்.
தவாங்கில் உள்ள க்யாங்கோங் அனி கோன்பாவிற்கு தவாங் மடாலயத்திலிருந்து ஏற்கனவே ஒரு ரோப்வே உள்ளது, இது சுமார் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
இந்த புதிய ரோப்வே அமைக்கும் திட்டமானது இப்பகுதியில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் அழகிய பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட உதவும் என்று பொது மக்கள் கருதுகின்றனர்.
முன்னதாக பாரத பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக அருணாச்சல பிரதேசத்திற்கு சென்று இட்டாநகரில் நடந்த ‘விக்சித் பாரத் – விக்சித் வடகிழக்கு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பின்னர் உலகின் மிக நீளமான இருவழிச் சுரங்கப்பாதையான சேலா சுரங்கப்பாதையை திறந்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.