சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான செப்.4ம் தேதி அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
எனவே, ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான செப்.4ம் தேதி ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பிரத்யேக சலுகைகளை வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா குழுமத்திற்கு [மேலும்…]
கல்யாணி பிரியதர்ஷன் நடித்த மலையாள சூப்பர் ஹீரோ படமான ‘லோகா அத்தியாயம் 1: சந்திரா’ இன்னும் திரையரங்குகளில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இருப்பினும், அதன் டிஜிட்டல் [மேலும்…]
சென்னையில் நேற்று கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,725-க்கும், ஒரு சவரன் ரூ.77,800-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் தங்கம் விலை [மேலும்…]
கோவையில் தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகையை மாணவர்கள் கோலாகலகமாகக் கொண்டாடினர். https://youtu.be/jkph2nWCYi4?si=eL_7d5xOQWrbDe-3 கேரள மக்களின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகை வரும் 5 ஆம் [மேலும்…]
மதிமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்த மல்லை சத்யா, கட்சியில் இருந்து விலகி, புதிய அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, [மேலும்…]