காற்று மற்றும் சூரிய ஒளி போல, அமைதியின் பலன்களை அடையும்போது, மக்கள் இவை இருப்பதை கவனிப்பது எளிமையல்ல. ஆனால் நம்மில் யாரும் அது இல்லாமல் வாழ முடியாது என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தெரிவித்தார். இந்த கருத்து, அமைதியின் அடிப்படையான பண்பை வெளிப்படுத்துகின்றது.
2024ஆம் ஆண்டு உலகளவில் மோதல்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2இலட்சத்தைத் தாண்டி, கடந்த 20 ஆண்டுகளில் உச்சத்தை எட்டியது என்றும், 2024ஆம் ஆண்டில் உலகளாவிய மோதல்களால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் 19.97 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டி, இது உலகின் ஜி.டி.பி. மதிப்பில் 11.6 விழுக்காட்டுக்கு சமமாகும் என்றும் ஐ.நா. வெளியிட்ட தரவுகளில் கூறப்பட்டுள்ளது. “வறுமை-போர்-வளர்ச்சியின்மை-மேலும் வறுமை” என்ற கேடான சுழற்சி பிரச்சினைக்குத் தீர்வு காண்பது உலகின் கட்டாய தேவையாகும்.
தற்போது உலகம் எதிர்கொண்டு வரும் அறைக்கூவல்கள், அமைதி வளர்ச்சி இடையே பிரிக்கப்பட முடியாது என்பதை காட்டியுள்ளன. காலநிலை மாற்றம், பயங்கரவாதம், உணவுப் பொருட்களின் பாதுகாப்பு, பொது சுகாதார நெருக்கடி உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகளைச் சமாளிப்பது, எந்த நாட்டினாலும் தனியாக செய்ய இயலாத விஷயம். சர்வதேச ஒத்துழைப்பு மூலம் தான் அனைவரும் கூட்டாக தீர்வு காண முடியும்.
நாட்டின் வளர்ச்சியில் மட்டுமல்லாமல், அமைதியான வளர்ச்சி கண்ணோட்டத்தை தற்கால தூதாண்மை நடைமுறைகளிலும் சீனா பின்பற்றி வருகின்றது.
ஐ.நா.பாதுகாப்பவை நிரந்திர உறுப்பு நாடுகளில் ஒன்றான சீனா அனுப்பிய 50 ஆயிரத்துக்கு மேலானோர், ஐ.நாவின் அமைதிக்கான பாதுகாப்புப் படைவீரர்களாக மோதல்கள் ஏற்பட்ட பகுதிகளுக்கு சென்று, ஒழுங்கு மறுசீரமைப்பில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் போது, பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலம் தீர்வு காண்பதற்கு சீனா எப்போதும் துணையிருக்கும். கடந்த பத்து ஆண்டுகளாக, சீனா 150க்கும் அதிகமான நாடுகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட சர்வதேச அமைப்புகளுடன் ஒத்துழைத்து 3000க்கும் அதிகமான திட்டங்களின் நடைமுறையை ஊக்குவித்து, 4 இலட்சத்து 20 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி, சுமார் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது.
சீனாவின் அமைதியான வளர்ச்சி கண்ணோட்டமானது, வளரும் நாடுகள் சுயாட்சி தேர்வு மற்றும் அமைதியான ஒத்துழைப்பு மூலம் நவீனமயமாக்கலை அடைய முடியும் என்பதை வெளிப்படுத்துகின்றது.