ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானின் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவான நிலநடுக்கத்தால் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.8ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.