பிரதமர் மோடி மூன்று புதிய ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்:
பிகானீர் மற்றும் டெல்லி கன்டோன்மென்ட் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ஜோத்பூர் மற்றும் டெல்லி கன்டோன்மென்ட் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் உதய்பூர் சிட்டி-சண்டிகர் எக்ஸ்பிரஸ்.இந்த ரயில்கள் இணைப்பை மேம்படுத்தும், பயண நேரத்தைக் குறைக்கும் மற்றும் பிராந்தியத்தில் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- புறப்படும் நேரம் (ஜோத்பூர்): காலை 5 : 25
- சென்றடையும் நேரம் (டெல்லி கண்டோன்மென்ட்): மதியம் 1:30
- திரும்பும் பயணம் (டெல்லியில் இருந்து): மாலை3 : 10-க்கு புறப்பட்டு இரவு 11.20-க்கு ஜோத்பூரை சென்றடையும்.
- சேவை நாட்கள்: வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற ஆறு நாட்களும் இயக்கப்படும்.
- நிற்கும் நிலையங்கள்: ராஜஸ்தானில் உள்ள மேர்தா ரோடு, தேகனா, மக்ரானா, புலேரா, ஜெய்ப்பூர், மற்றும் ஆல்வர் ஆகிய நிலையங்களிலும், ஹரியானாவில் உள்ள ரேவாரி மற்றும் குர்கான் ஆகிய நிலையங்களிலும் இந்த ரயில் நின்று செல்லும்.
- பிகானேர் – டெல்லி வழித்தடம்
- புறப்படும் நேரம் (பிகானேர்): காலை 5 : 40
- சென்றடையும் நேரம் (டெல்லி கண்டோன்மென்ட்): காலை 11:05
- திரும்பும் பயணம் (டெல்லியில் இருந்து): மாலை 4:45-க்கு புறப்பட்டு இரவு 11.05-க்கு பிகானேரை சென்றடையும்.
- நிற்கும் நிலையங்கள்: ராஜஸ்தானில் உள்ள ரத்தன்கர், சுரு, சத்ல்பூர் மற்றும் ஹரியானாவில் உள்ள லோஹாரு, மகேந்திரகர், ரேவாரி, குர்கான் ஆகிய நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
தற்போது இயங்கும் வந்தே பாரத் ரயில்கள்
வடமேற்கு ரயில்வே மண்டலம் (North Western Railways – NWR), இந்த இரண்டு புதிய ரயில்களுடன் சேர்த்து மொத்தம் நான்கு வந்தே பாரத் ரயில்களை இயக்குகிறது. அவை:
- அஜ்மீர் – சண்டிகர் (ஜெய்ப்பூர் மற்றும் டெல்லி வழியாக)
- ஜெய்ப்பூர் – உதய்பூர்
- ஜோத்பூர் – சபர்மதி
- உதய்ப்பூர் – ஆக்ரா
இந்த வந்தே பாரத் ரயில்கள், ராஜஸ்தானின் பல்வேறு நகரங்களை டெல்லி மற்றும் பிற மாநிலங்களுடன் இணைத்து, பயண நேரத்தைக் குறைக்கும்.