இந்தியாவுடன் வலுவான உறவு உள்ளது; அந்தர் பல்டி அடித்த டொனால்ட் டிரம்ப்  

Estimated read time 1 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது நீண்ட கால நட்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மோடியை ஒரு சிறந்த பிரதமர் என்று பாராட்டிய டிரம்ப், இந்தியா – அமெரிக்கா உறவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் சிறப்பானது என்று குறிப்பிட்ட டிரம்ப், தற்போதுள்ள சில பதட்டங்கள் தற்காலிகமானவை என்றும் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய டிரம்ப், “நான் எப்போதும் மோடியுடன் நண்பனாக இருப்பேன்.
அவர் ஒரு சிறந்த பிரதமர். ஆனால் அவர் இந்த குறிப்பிட்ட தருணத்தில் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை” என்று தெரிவித்தார்.
இருப்பினும், மோடியின் எந்தச் செயல் அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது என்பதை அவர் விளக்கவில்லை.

You May Also Like

More From Author