அமெரிக்க நிறுவனமான யுஎஸ் ஸ்ட்ராடஜிக் மெட்டல்ஸுடன் (யுஎஸ்எஸ்எம்) கையெழுத்திட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தனது முதல் அரிய வகை கனிமங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
ஆனால், இந்தக் கனிமங்கள் மற்றும் துறைமுகம் தொடர்பான ரகசிய ஒப்பந்தங்கள் குறித்து அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சி கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளது.
ஏற்றுமதியான மாதிரி கனிமங்களில் அண்டிமனி, செம்பு மற்றும் நியோடைமியம், பிரசியோடைமியம் போன்ற அரிய வகை தாதுக்கள் அடங்கும்.
இந்த ஏற்றுமதியானது, யுஎஸ்எஸ்எம் நிறுவனம் பாகிஸ்தானின் ராணுவ பொறியியல் பிரிவான ஃபிரான்டியர் ஒர்க்ஸ் ஆர்கனைசேஷனுடன் செப்டம்பரில் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரிய கனிமங்களின் முதல் தொகுதியை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தது பாகிஸ்தான்
