மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட பல இடங்களில் என்ஜினீயரிங் பணிகள் நடைபெறுவதால் வருகிற 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கோட்டையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
கன்னியாகுமரி- ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் கன்னியாகுமரியில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். கன்னியாகுமரி- ஐதராபாத் சிறப்பு ரெயில் வருகிற 12-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஜங்ஷன் வழியாக இயக்கப்படும். திருச்சி- ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 15, 16, 17 மற்றும் 18-ந் தேதிகளில் காலை 7.05 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும். இந்த ரெயிலானது மானாமதுரை – ராமேசுவரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
ராமேசுவரம்-திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 15-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை ராமேசுவரம்- மானாமதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் மானாமதுரையில் இருந்து மாலை 4.55 மணிக்கு புறப்படும். நாகர்கோவில் -மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 11 மற்றும் 14-ந் தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
என்ஜினீயரிங் பணிகள்
திருவனந்தபுரம் கோட்டத்தில் பல இடங்களில் என்ஜினீயரிங் பணிகள் நடந்து வருவதால் வருகிற 11-ந் தேதி சென்னை எழும்பூர்- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 10.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு வழியில் ஏதாவது ஒரு இடத்தில் 45 நிமிட நேரம் நிறுத்தி வைக்கப்படும். வருகிற 15-ந் தேதி சென்னை- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னையில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு வழியில் ஏதாவது ஒரு இடத்தில் 30 நிமிட நேரம் நிறுத்தப்படும்.
பாலக்காடு கோட்டத்தில் பல இடங்களில் என்ஜினீயரிங் பணிகள் நடப்பதால் பாலக்காடு டவுன்- திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் செப்டம்பர் 15-ந் தேதி பாலக்காட்டில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு வழியில் ஏதாவது ஒரு இடத்தில் 30 நிமிடம் நிறுத்தி வைக்கப்படும்.
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்
திருச்சி கோட்ட ரெயில்வே எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் என்ஜினீயரிங் பணிகள் நடைபெறுவதால் விழுப்புரம் -மயிலாடுதுறை மெமு ரெயில் வருகிற 13, 20 மற்றும் 27-ந் தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து 25 நிமிடம் தாமதமாக மதியம் 2.35 மணிக்கு புறப்படும். குருவாயூர் -சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 16, 23 மற்றும் 30-ந் தேதிகளில் வழியில் தேவையான இடத்தில் 30 நிமிடம் நிறுத்தப்படும். மயிலாடுதுறை திருச்சி மெமு ரெயில் வருகிற 10, 11, 12, 13, 14 மற்றும் 15-ந் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.