நவம்பர் 19ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் கூறுகையில்,
தைவான் குறித்து ஜப்பான் தலைமை அமைச்சர் தகைச்சி சானேவின் தவறான கூற்று, சீன-ஜப்பான் உறவின் அரசியல் அடிப்படையைச் சீர்குலைத்துள்ளது. சீன பொது மக்களின் கோபத்தையும் கண்டனத்தையும் இது ஏற்படுத்தியது.
ஜப்பான் தவறான கூற்றைத் திரும்ப பெற்று, சீனாவுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து சர்ச்சையை உருவாக்குவதை நிறுத்த வேண்டும். நடைமுறை நடவடிக்கை மேற்கொண்டு தவறுகளைத் திருத்தி, சீன-ஜப்பான் உறவின் அரசியல் அடிப்படையைப் பேணிக்காக்க வேண்டும்.
தவறான கூற்றைத் திரும்ப பெறாமல் புதிய தவறு செய்தால், சீனா மேலும் கடினமான பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். இதன் விளைவுகளை ஜப்பான் சந்திக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியது என்றார்.
