தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாத திமுக : அண்ணாமலை

தேர்தல் வாக்குறுதிகளை திமுக முழுமையாக நிறைவேற்றவில்லை என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சி பாராளுமன்றத் தொகுதியில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்,   செந்தில்நாதனுக்கு ஆதரவாக அண்ணாமலை நேற்று வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், அமரர் ரங்கராஜன் குமாரமங்கலம்  பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, திருச்சி பாராளுமன்றம் பெற்ற வளர்ச்சியை, செந்தில்நாதன்  பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும்போதும் பெறும் என்று உறுதி அளிக்கிறேன்.

தமிழக அரசியலில், திருச்சி என்றாலே திருப்புமுனை தான். திருச்சி பாராளுமன்றத் தேர்தலில், அண்ணன்  செந்தில்நாதன் பிரஷர் குக்கர் சின்னத்தில் பெறவிருக்கும் வெற்றியானது, தமிழக அரசியலில் நிச்சயம் திருப்புமுனையை கொண்டு வரும்.

திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் 20 வாக்குறுதிகளைக் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக, திருச்சி மாநகரம் தத்தளிக்கிறது. மத்திய அரசின் நலத்திட்டங்களை, கடைக்கோடி மக்கள் வரை கொண்டு சேர்க்க, இங்குள்ள திமுக, அதிமுகவினர் முயற்சி எடுக்கவில்லை.

ஆனால்,  செந்தில்நாதன் வெற்றி பெற்று,   மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கத் துணையிருக்கும் 400 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக, திருச்சிக்கு நிச்சயம் வளர்ச்சியைக் கொண்டு வருவார் என்பது உறுதி.

திருச்சியில், தமிழக பாஜக சார்பில், அத்தனை தலைவர்களும் கலந்து கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் நிச்சயம் நடத்தவுள்ளோம். திருச்சியின் இழந்த பெருமையை மீட்டெடுக்க, ஏப்ரல் 19 அன்று நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில், செந்தில்நாதனுக்கு கட்சி வேறுபாடின்றி, பிரஷர் குக்கர் சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என அண்ணாமலை கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author