உலகில் மிகப் பெரிய அளவுடைய மருத்துவ சிகிச்சைச் சேவை அமைப்பு முறையைச் சீனா உருவாக்கியுள்ளது. 2024ஆம் ஆண்டின் இறுதி வரை, சீனா முழுவதிலும் உருவாக்கப்பட்டுள்ள மருத்துவ சிகிச்சை மற்றும் சுகாதார நிறுவனங்களின் எண்ணிக்கை 10லட்சத்து 90ஆயிரம் ஆகும். இந்நிறுவனங்களில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை 1கோடியே 57லட்சத்து 80ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அடிப்படை மருத்துவக் காப்பீட்டுடைய மக்களின் எண்ணிக்கை 130கோடியை எட்டி நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 95விழுக்காடாக உள்ளது. மேலும், சீனப் பாரம்பரிய மருத்துவச் சேவை கிராமப்புற மற்றும் நகரப்புற மருத்துவ சிகிச்சை நிறுவனங்களில் பரவலாக நடத்தப்பட்டுள்ளது. மக்கள் 15 நிமிடங்களுக்குள் அருகிலுள்ள மருத்துவ சிகிச்சைச் சேவை மையத்தைச் சென்றடைய முடியும் என்று 11ஆம் நாள் சீன அரசவை நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய அளவுடைய மருத்துவ சிகிச்சைச் சேவை அமைப்பு முறையை உருவாக்கியுள்ள சீனா
Estimated read time
1 min read
