சீனா ஐரோப்பிய ஒன்றியம் இடையே தூதாண்மை உறவு நிறுவப்பட்டு இவ்வாண்டுடன் 50ஆவது ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதை முன்னிட்டு, இரு தரப்பு தலைவர்களுக்கிடையே புதிய சந்திப்புகள் நடைபெற உள்ளன.
அண்மையில் சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 13ஆவது சுற்று உயர் நிலையிலான நெடுநோக்கு பேச்சுவார்த்தை பிரஸல்ஸில் நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய தலைவர்களுடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ சந்திப்பு நடத்தி, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளில் பயணம் மேற்கொண்டார். அப்போது சீனத் தரப்பு கூறுகையில், சீன மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறவின் வளர்ச்சி வரலாற்றிலிருந்து பார்த்து, இரு தரப்பினருக்கும் இடையிலான உறவு எதிரிகளாக இல்லாமல் கூட்டாளிகளாக திகழ்ந்து வருகின்றது. ஒத்துழைப்பானது தொடர்ந்து அடிப்படையான பங்கு வகித்து வருகின்றது என்று தெரிவித்தது.
அதேவேளையில், சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து, உலகிற்கு அரிதான உறுதி தன்மையை வழங்குமாறு சீனா வேண்டுகோள் விடுத்தது. இது குறித்து ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா உள்ளிட்டவர் கூறுகையில், சீனாவுடன் இணைந்து, ஒன்றுக்கொன்று மதிப்பு அளித்தல், கருத்து வேற்றுமையைக் களைதல், புரிந்துணர்வை அதிகரித்தல் ஆகியவற்றை நோக்கி செயல்பட ஐரோப்பிய ஒன்றியம் விரும்புவதாகவும், இரு தரப்புகளின் தலைவர்களுக்கிடையே புதிய சந்திப்புகளுக்கான ஆயத்தப் பணியை செவ்வனே செய்யவும், ஆக்கப்பூர்வமான ஐரோப்பிய ஒன்றிய-சீன உறவை வளர்க்கவும், உலகிற்கு நிலையான நம்பிக்கையையும் சாதகமான எதிர்பார்ப்பையும் கொண்டு வர ஐரோப்பிய ஒன்றியம் விரும்புவதாகவும் தெரிவித்தனர்.