சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 3ஆம் நாள் பெய்ஜிங்கில் சீனாவுக்கான அமெரிக்காவின் புதிய தூதர் டேவிட் பெர்டூவைச் சந்தித்துரையாடினார்.
டேவிட் பெர்டூ பதவியேற்பை வரவேற்று வாங்யீ கூறுகையில், சீன-அமெரிக்க இடையே நம்பகமான தொடர்பாளராகச் செயல்பட்டு வேறுபாடுகளை களைந்து ஒத்துழைப்பை முன்னேற்றி இரு நாட்டுறவின் சுமுகமான நிதானமான தொடரவல்ல வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாகப் பங்காற்ற வேண்டுமென விரும்புவதாகவும் பெர்டூ தெரிவித்தார்.
அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கை மிகவும் மதிக்கிறார். இரு நாட்டுத் தலைவர்கள் ஆக்கப்பூர்வமான பயனுள்ள தொடர்பை நிலைப்படுத்துவது மிக முக்கியமானதாக இருக்கும் என்று பெர்டூ கூறினார்.
