சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் 19ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டில் சீனாவின் சந்தை விற்பனை தொடர்ந்து விரிவாகி சேவைத் துறையின் சில்லறை விற்பனைத் தொகை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
முழு ஆண்டிலும் சமூக நுகர்வுப் பொருட்களின் மொத்த சில்லறை விற்பனைத் தொகை 50லட்சத்து 12ஆயிரத்து 20கோடி யுவானை எட்டி கடந்த ஆண்டை2024ஆம் ஆண்டை விட, 3.7விழுக்காடு அதிகரித்துள்ளது.
தொலை தொடர்பு உபகரணங்கள், பண்பாடு மற்றும் அலுவலகப் பொருட்கள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு பொருட்கள், வீட்டுப்பயன்பாட்டு மின் சாதனங்கள் உள்ளிட்ட வகைகளின் விற்பனையில் விரைவான அதிகரிப்பு காணப்பட்டுள்ளது.
