சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் உள்நாட்டுத் தேவையை விரிவாக்குவது நெடுநோக்குத் தன்மை வாய்ந்த நடவடிக்கையாகும் என்ற தலைப்பில் எழுதிய முக்கிய கட்டுரை டிசம்பர் 16ஆம் நாள் ச்சுஷ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அவர் இக்கட்டுரையில் கூறுகையில்,
உள்நாட்டுத் தேவைகளை விரிவாக்குவது, பொருளாதாரத்தின் நிதானம் மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடையது. உள்நாட்டுத் தேவையை விரிவாக்கும் நெடுநோக்கு நடவடிக்கை, சீனப் பொருளாதாரத்தின் நீண்டகாலமான தொடர்ச்சியான வளர்ச்சியை நிலைநிறுத்துவதற்கான தேவையாகும். மேலும், இது,
அருமையான வாழ்க்கையின் மீதான மக்களின் அதிகரித்து வரும் தேவைகளை நிறைவு செய்வதற்காகவும் அமையும் என்றார்.
பெரிய நாட்டின் பொருளாதாரத்தின் மேம்பாடானது உள்புறத்திற்குள் சீரான சுழற்சி என்பது இக்கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டுத் தேவையை விரிவாக்கும் நெடுநோக்கு வரைவுத் திட்டத்தை உறுதியாகச் செயல்படுத்த வேண்டும். வேலை வாய்ப்புகளை விரைவுபடுத்துவது என்பது நுகர்வுகளை விரிவாக்குவதற்கு அடிப்படையாகும். சமூக காப்புறுதியை தொடர்ந்து மேம்படுத்தி, கூட்டு செழுமையை உறுதியாக முன்னேற்ற வேண்டும் என்றும் இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
