செர்பிய அரசுத் தலைவர் வுசிசி அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், செப்டம்பர் 3ம் நாள் நடைபெற்ற சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்ற 80வது ஆண்டு நிறைவின் கூட்டம், அதிர்ச்சி தரும் நிகழ்ச்சியாகும். அதில் கலந்து கொண்ட விருந்தினர்கள் அனைவரும் பெருமையை அடைந்தனர். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வழங்கிய அரசியல் தகவல்கள் மிக முக்கியமானவை. அவர் வலியுறுத்திய அமைதி, நியாயம் மற்றும் உலகின் நிலைத்தன்மையைப் பேணிக்காப்பது, உலகிற்குத் தேவைப்படும் சிந்தனையாகும். அவர் முன்வைத்த உலகளாவிய ஆட்சி முறை முன்மொழிவுக்கு உறுதியாக ஆதரவு அளிக்கிறோம். உலகின் பதற்றம் நீடித்து, பிராந்திய மோதல்கள் தீவிரமடைந்த நிலைமையில், இந்த முன்மொழிவு முக்கியத்துவம் வாய்ந்தது. ஷிச்சின்பிங் முன்வைத்த முன்மொழிவுகள், சீன மக்களுக்கு மட்டுமல்ல, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பங்கெடுத்த அனைத்து நாடுகளின் மக்களுக்கும் மேலும் சிறந்த வாழ்க்கை வழங்க உதவுகின்றன. எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு, புதிய தொழில் நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் செர்பிய-சீன ஒத்துழைப்பு வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பு தெரிவித்தார்.