சீனத் தேசிய புள்ளி விவரப் பணியகம் 15ஆம் நாள் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, இவ்வாண்டின் ஆகஸ்ட் திங்களில், சீனாவில் உற்பத்தி தேவை அடிப்படையில் சீராக இருந்து, வேலை வாய்ப்புகள் மற்றும் விலைவாசி பொதுவாக நிதானமாகி, புதிய இயக்காற்றலின் வளர்ச்சி வலுவாக இருந்தது. தேசியப் பொருளாதாரம் சீராக முன்னேறி வரும் போக்கினை நிலைநிறுத்தியது.
இப்புள்ளி விவரங்களின்படி, ஆகஸ்ட் திங்களில் சீனத் தொழிற்துறை உற்பத்தி மற்றும் சேவைத் தொழில் வேகமாக வளர்ந்து வந்தன. நிலையான சொத்துக்களிலான முதலீடு அதிகரித்து வந்தது. சரக்குகளின் ஏற்றுமதியும் இறக்குமதியும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. அக்காலத்தில் சமூக நுகர்வுப் பொருட்களின் மொத்த சில்லறை விற்பனைத் தொகை, 3 லட்சத்து 96 ஆயிரத்து 680 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 3.4 விழுக்காடு அதிகரித்துள்ளது.