3ஆவது சீன சர்வதேச வினியோக சங்கிலி பொருட்காட்சி 16 முதல் 20ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. இந்த பொருட்காட்சியின் நிலப்பரப்பு 1 இலட்சத்து 20 ஆயிரம் சதுரமீட்டராகும். புதுப்பிப்பு சங்கிலி பொருட்காட்சி பகுதி முதன்முறையாக அமைக்கப்படும். 2 இலட்சத்துக்கு மேலான பேர் நேரடியாகவும் இணையத்தின் மூலமாகவும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
உலகத்தை இணைப்பது, எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்குவது என்பது இப்பொருட்காட்சியின் தலைப்பாகும். 75 நாடுகள், பிரதேசங்கள், சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த 650க்கும் மேலான நிறுவனங்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளன. இவற்றில் உலகின் முன்னேறிய 500 தொழில் நிறுவனங்கள் வகிக்கும் விகிதம் 65 விழுக்காட்டைத் தாண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.