இன்று புரட்டாசி 1 : முதல் நாளில் வீட்டில் செய்ய வேண்டிய எளிய வழிபாடு..!

Estimated read time 0 min read

பெருமாளை வழிபடுவதற்கும், பெருமாளின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கும் ஏற்ற மாதமாக விளங்குவது புரட்டாசி மாதம். புரட்டாசியின் எந்த நாளில் பெருமாளை மனதார வழிபட்டாலும், அதற்கு முழுமையான பலன் நமக்கு கிடைக்கும். இந்த ஆண்டு புரட்டாசி மாதம் செப்டம்பர் 17ம் தேதி பிறக்கிறது.

புரட்டாசி மாதத்தில் அனைத்து நாட்களும் விரதம் இருந்து, பெருமாளை வழிபட ஏற்ற நாட்கள் என்றாலும், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பல மடங்கு அதிக பலன்களை நமக்கு தரக் கூடியவையாகும். புரட்டாசி மாதமும் முழுவதிலும் விரதம் இருந்து, பெருமாளை வழிபட முடியாதவர்களும் கூட, புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டும் விரதம் இருந்தால், புரட்டாசி முழுவதும் விரதம் இருந்து வழிபட்ட பலனை பெற்று விட முடியும்.

புரட்டாசி வழிபாட்டு முறை :

புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு தளிகை இடும் வழக்கம் உள்ளவர்கள் அந்த முறையில் பெருமாளை வழிபடலாம். பொதுவாக புரட்டாசி மாதத்தில் முதல் மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் தான் தளிகை இட்டு வழிபடுவார்கள். அப்படி வழிபட முடியாதவர்கள் தங்களுக்கு வசதியான வாரங்களின் சனிக்கிழமைகளில் தளிகையிட்டு வழிபடலாம். அதோடு புரட்டாசி மாதத்தின் முதல் நாள் துவங்கி, கடைசி நாள் வரை முடிந்த பொழுதுதெல்லாம் அருகில் உள்ள பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் கோவில், சக்கரத்தாழ்வார் கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகிறது மிகவும் சிறப்பானதாகும்.

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மட்டுமின்றி புதன்கிழமைகளிலும் சிறப்பு வழிபாடு நடத்துவது மிகவும் விசேஷமானதாகும். புரட்டாசி மாதம் என்பது புதனின் ஆதிக்கம் அதிகம் உள்ள மாதமாகும். ஜோதிட சாஸ்திரப்படி, ஞானகாரகன் என போற்றப்படுபவர் புதன் பகவான். குழந்தைகளின் படிப்பு, அறிவு, செல்வம், திறமைகள் ஆகியவற்றை வழங்கக் கூடியவர் புதன் பகவான் தான். புதன் பகவானுக்குரிய அதிதேவதையான பெருமாளக்குரிய புரட்டாசி மாதத்தில் வரும் புதன்கிழமையில் புதன் பகவானை வழிபடுவது மிகவும் சிறப்பான பலன்களை தரும். புதன் பகவானின் அருளையும் நமக்கு கொடுக்கும்.

புரட்டாசி மாதத்தின் முதல் நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள பெருமாள் படத்திற்கு துளசி மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி வைத்து, பெருமாளுக்குரிய நாமங்கள், மந்திரங்களை சொல்லி வழிபட வேண்டும். மந்திரங்கள் ஏதும் தெரியவில்லை என்கிறவர்கள், “ஓம் நமோ நாராயணாய நமஹ” என்ற அஷ்டாட்ஷர மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபடலாம். பெருமாளுக்கு துளசி தீர்த்தம், பால், கற்கண்டு, பானகம் ஆகியவை படைத்து எளிமையாக வழிபடலாம். நேரம் இருக்கிறது என்பவர்கள் சர்க்கரை பொங்கல், பாயசம், வடை போன்ற பலவிதமான நைவேத்தியம் செய்து படைத்து வழிபடலாம். காலையில் வழிபட முடியாதவர்கள் மாலை 6 மணிக்கு பிறகு பெருமாள் படத்திற்கு துளசி மாலை சாற்றி வழிபடலாம். காலையில் துளசி மாலை சாற்றி வழிபட்டவர்கள், மாலையில் ஏதாவது மலர் படைத்து வழிபடலாம். இப்படி வழிபடுவதால் பெருமாளின் அருள் நமக்கு முழுவதுமாக கிடைக்கும்.

Please follow and like us:

You May Also Like

More From Author