Post Views: 47
50 தொகுதிகளில் படுத்துக்கொண்டே ஜெயிப்பதற்கான வித்தைகளை சொல்லிக்கொடுத்தேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ், இன்று கூட்டியுள்ள மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் அன்புமணி பங்கேற்கவில்லை.
கெளரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட ஒருசில நிர்வாகிகள் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் வரவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், பா.ம.கவில் கோஷ்டி மோதல் இல்லை. தனியாக நின்றாலும் 50
தொகுதிகளில் வெற்றி பெறுவோம். கூட்டணியில் போட்டியிட்டால் அதிகம் வெல்வோம். நிச்சயம் கூட்டணி உண்டு. கூட்டத்திற்கு வராதவர்கள் மீது
நடவடிக்கை இல்லை. சிங்கத்தின் கால்கள் பழுதாகாதபோது சீற்றம் இன்னும் அதிகமாகத் தானே இருக்கும். ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்ற அந்த சீற்றம், எண்ணம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. 50 தொகுதிகளில் படுத்துக்கொண்டே ஜெயிப்பதற்கான வித்தைகளை சொல்லிக்கொடுத்தேன்.
50 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான யோசனைகளை பரிமாறிக்கொள்வதற்கான கூட்டம் இது. செயல்பட முடியவில்லை என யாரும் விருப்பம் தெரிவித்தால், விரும்பியபடி மாற்றப்படுவார்கள் என கூறினார்.
Please follow and like us: