சீன–கியூபா
தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய
கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் 28ஆம் நாள், கியூபா கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் முதன்மைச் செயலாளரும் அரசுத் தலைவருமான டியாஸ்–கேனல் ஆகிய இருவரும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்தியை அனுப்பினர்.
இதில் ஷிச்சின்பிங் கூறுகையில்,
சீன–கியூபா
உறவு, சோஷலிச நாடுகள் ஒற்றுமையுடன் ஒத்துழைத்து, வளரும்
நாடுகளுக்கிடையில் ஒன்றுக்கு ஒன்று ஆதரவளிக்கும் முன்மாதிரியாக விளங்குகிறது. கியூபாவுடன் இணைந்து, பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பை வலுப்படுத்தி, சர்வதேச நீதி மற்றும் நியாயத்தைக் கூட்டாகப் பேணிக்காத்து, சீன–கியூபா
எதிர்கால பொது சமூகக் கட்டுமானம் தொடர்ந்து புதிய சாதனைகளைப் பெற விரைவுபடுத்த வேண்டும் என்றார்.
அந்நாட்டின் அரசுத் தலைவர் டியாஸ்–கேனல் மற்றும் சீனியர் ஜெனரல் ரவுல் கூட்டாக சீன அரசுத் தலைவருக்கு வாழ்த்து செய்தியை அனுப்பியுள்ளனர். அவர்கள் கூறுகையில்,
கடந்த 60க்கும் மேலான ஆண்டுகளில், இரு தரப்புறவு நீண்டகால சோதனைகளைத் தாக்குபிடித்து வளர்ந்து வருகிறது. ஒரே சீனா எனும் கொள்கையை கியூபா எப்போதும் கடைப்பிடித்து வருகிறது. வெளிபுற சக்தி, சீனாவின் உள்விவகாரத்தில் தலையிடுவதை எதிர்த்து, சீன–கியூபா
எதிர்கால பொது சமூகக் கட்டுமானத்தை உறுதியாக முன்னேற்றி, ஆதிக்கத்தை எதிர்த்து வருகிறது என்று தெரிவித்தனர்.