கோவில்பட்டி கம்பன் கழகத்தின் 329 வது மாத இலக்கிய ஆய்வரங்க கூட்டம் செக்கடித்தெருவில் உள்ள எழில் புத்தக நிலைய வளாகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் தலைமை வகித்தார்.
உலகதிருக்குறள் கூட்டமைப்பு துணைத்தலைவர் கருத்தப்பாண்டி,நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவில்பட்டி கம்பன் கழக பொருளாளர் தங்கப்பாண்டி அனைவரையும் வரவேற்றார்.
முன்னாள் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மனோகர் கம்பனில் பார்த்த மங்கையும் கேட்ட மங்கையும் எனும் தலைப்பிலும்,கம்பன் கழகத் தலைவர் துரைப்பாண்டி நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா எனும் தலைப்பிலும் சிறப்புரையாற்றினர்.
இதில் அக்ரி நடராஜன், அய்யப்பன்,ஜெயசக்கரவர்த்தி,மகேந்திரன்,சுப்புலட்சுமி,கிருஷ்ணன் ஆகியோர் கம்ப ராமாயண சிறப்புகள் குறித்து பேசினர்.
சமூக ஆர்வலர் செல்லத்துரையின் சமூகப் பணிகள் பாராட்டப்பட்டது.
இதில் 50க்கும் மேற்பட்ட கம்பன் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் கம்பன் கழக செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.