இந்தியாவின் சில்லறை பணவீக்கம் செப்டம்பர் 2025 இல் 1.54% ஆகக் குறைந்து, 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.
முன்னதாக, இது ஆகஸ்டில் 2.07% ஆக இருந்தது. காய்கறி மற்றும் பருப்பு வகைகளின் விலை சரிவு, மேலும் சாதகமான அடிப்படை விளைவு ஆகியவை இதற்குக் காரணமாக அமைந்துள்ளன.
அதேசமயம், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பெரிதும் உயர்ந்ததால் முக்கிய பொருட்களின் (Core) பணவீக்கம் இரண்டு ஆண்டுகளில் அதிகபட்சமாக 4.43% ஆக உயர்ந்துள்ளது.
இந்த சரிவு, பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்த 1.5% அளவுடன் ஒத்துப்போகிறது. இது கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) 2-6% இலக்கு வரம்பின் கீழ் விழுந்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 1.54% ஆகக் குறைவு
