வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடிய நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் அவினாசியில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அதற்குப் பின், சேலம் மாவட்டம் மேட்டூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, கரூர் மாவட்டம் ஆனைப்பாளையத்தில் தலா 8 செ.மீ. மழை பதிவானது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது.
இதன் தாக்கமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தின் பல பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடியுடன் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
