கரூரில் நடந்த TVK கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ (CBI) விசாரணைக்கு உத்தரவு வழங்கியுள்ளது.
மேலும் விசாரணையை கண்காணிக்க சிறப்பு விசாரணைக் குழு – ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் – சிபிஐ மேற்கொள்ளும் விசாரணையை இது கண்காணிக்கும் எனவும் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.
சிபிஐ விசாரணையை கண்காணிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஒரு குழுவையும் உச்ச நீதிமன்றம் அமைத்தது. இந்தக் குழுவில் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டிராத இரண்டு தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் இருப்பார்கள்.
TVK கரூர் நெரிசல் விவகாரத்தில் CBI விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்
